ஈரான் போரில் தென்கொரியா பங்கேற்காததையடுத்து, அந்நாட்டுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் குறைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
தென்கொரியாவடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் குறைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். ஈரான் போரில் தென்கொரியா ஒதுங்கி இருந்ததே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
வடகொரியாவின் போர்க்கள அனுபவம் மற்றும் இராணுவ வலிமை அதிகரித்து வருவதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். இது ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு சூழலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.