வைட்டமின் டி இன்சுலின் உற்பத்தியைத் தூண்டி பீட்டா செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோயைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வைட்டமின் டி உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இது எலும்பு ஆரோக்கியம் மற்றும் உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு அவசியம். சமீபத்திய ஆய்வின்படி, வைட்டமின் டி கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் பீட்டா செல்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பது வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவும். மேலும் முட்டை மஞ்சள் கரு, காட் லிவர் ஆயில் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இருப்பினும், வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுப்பதற்கு முன் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.