கடந்த 17 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உறுப்பு தானத் திட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. விழிப்புணர்வு மற்றும் அரசுத் திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம்.
2008-ல் வெறும் ஏழு உறுப்பு தானங்களுடன் தொடங்கிய தமிழ்நாட்டின் பயணம், இன்று ஆண்டுக்கு 266 உறுப்பு தானங்கள் வரை உயர்ந்துள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மருத்துவக் கட்டமைப்பு மற்றும் அரசு அங்கீகாரமும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இந்தியாவின் மொத்த உறுப்பு தானங்களில் சுமார் 72% ஐந்து மாநிலங்களிலேயே நடைபெறுகின்றன, அதில் தமிழ்நாடும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இறந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கும் திட்டம், மக்கள் மத்தியில் உறுப்பு தானம் குறித்த தயக்கத்தைப் போக்கி நம்பிக்கையை அதிகரித்துள்ளது.