பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலி டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த சதித் திட்டம் இந்தியாவிற்கு வெளியே இருந்து திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரின் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களில் அவர்கள் கூறாத கருத்துக்களைப் பேசியது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த சதித் திட்டம் பாகிஸ்தான் சமூக வலைதளக் கணக்குகள் மூலம் இந்தியாவிற்கு வெளியே இருந்து நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பியூஷ் கோயல் சானக்யபுரியில் புகார் அளித்துள்ளார்.