ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், குறைந்தது 2.5 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவின் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சின் போர்டோ நகரின் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயிலிருந்து தப்பிக்க போராடிய சுற்றுலாப் பயணிகள் தங்களின் பயங்கரமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். ஸ்பெயினில் வீசும் பலத்த காற்றினால் தீயைக் கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.