காஸ்பியன் கடலில் உள்ள ஒரு வணிகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல், ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான ரகசியத் தொடர்பைப் பாதித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.

காஸ்பியன் கடலில் ஒரு வணிகக் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஈரான் மற்றும் ரஷ்யா இடையேயான முக்கியமான ரகசியத் தொடர்புப் பாதையான 'காஸ்பியன் நெடுஞ்சாலையை'ச் சிதைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உக்ரைனின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுப்போம் என்றும், இதன் விளைவுகளை உக்ரைன் சந்திக்க நேரிடும் என்றும் தெஹ்ரான் எச்சரித்துள்ளது.