கடந்த டிசம்பர் மாதம் ராணுவ ஆதரவு தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி போராடிய ஒன்பது ஆர்வலர்களுக்கு மியான்மர் நீதிமன்றம் அதிகபட்சமாக 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

டிசம்பர் மாதம் நடைபெற்ற ராணுவ ஆதரவு தேர்தலை புறக்கணிக்கக் கோரி போராடிய ஒன்பது ஆர்வலர்களுக்கு மியான்மர் நீதிமன்றங்கள் அதிகபட்சமாக 37 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளன. மந்தலே நீதிமன்றங்கள் பிரபல ஆர்வலர் ஹெட் மியாட் ஆங் உட்பட எட்டு பேருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாவது ஆர்வலர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் 27 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த போராட்டக்காரர்கள் தேர்தலை புறக்கணிக்கவும், கட்டாய ராணுவ சேவையை நிராகரிக்கவும் வலியுறுத்தினர்.