பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலை வீடியோவாக வெளியிட்டுள்ளது. சுரப் மாவட்டத்தில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த மோதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு, மின்சார கோபுரங்களும் தகர்க்கப்பட்டுள்ளன.
மேலும், சுரப் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 14-ஆம் தேதியை 'கருப்பு தினமாக' பலுசிஸ்தான் மக்கள் அனுசரித்து வருகின்றனர்.