ஷேக் ஹசினாவின் Awami League மற்றும் BNP ஆகிய கட்சிகள் இணைய வேண்டும் என்று BNP நாடாளுமன்ற உறுப்பினர் நாசிர் உத்தீன் சௌத்ரி கோரிக்கை விடுத்துள்ளார். இது வங்கதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசின் டெல்லியில் உரையாற்றியதோடு, டிசம்பரில் வங்கதேசத்திற்குத் திரும்புவதாக அறிவித்த நிலையில், BNP நாடாளுமன்ற உறுப்பினர் நாசிர் உத்தீன் சௌத்ரி விடுத்த கோரிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது. Awami League-வை எதிரியாகக் கருதாமல் கூட்டாளியாகக் கருதி, இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், BNP தலைமை மற்றும் வங்கதேச அரசாங்கம் இவரது கருத்தை மறுக்கின்றன. சௌத்ரியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.