மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மூன்றில் எந்தவொரு நாட்டையும் தாக்குவது அனைத்தையும் தாக்குவதற்கு சமம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்க் சூழலில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சவுதி அரேபியாவின் மக்காவில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இடையிலான சந்திப்பில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த மூன்று நாடுகளும் தங்கள் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த முயன்று வருகின்றன. கடந்த ஆண்டு சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.