ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பாப் அல்-மந்தேப் நீரிணையில் ஒரு சரக்குக் கப்பல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
செங்கடலின் பாப் அல்-மந்தேப் நீரிணையில் சென்றுகொண்டிருந்த வணிகச் சரக்குக் கப்பல் மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்றும் ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இத்தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சமீபகாலமாக செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் செல்லும் சர்வதேச கப்பல்களை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.