பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்திருப்பதாகப் பரவி வரும் வதந்தி பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பிடிஐ (PTI) நிறுவனரான இம்ரான் கான் சிறையில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜஹத் சயீத் கான் தனது யூடியூப் சேனலில், மூன்று மூத்த ராணுவத் தரப்பினர் இம்ரான் கான் உயிருடன் இல்லை என்று சந்தேகப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தத் தகவல் நேரடிச் சாட்சியின் அடிப்படையில் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இம்ரான் கானின் குடும்பத்தினர் மற்றும் கட்சித் தலைவர்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படாதது அவரது உடல்நலம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது. பிடிஐ கட்சி ஏற்கனவே இம்ரான் கானின் தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ வசதி குறித்த புகார்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், பிடிஐ கட்சிப் போராட்டம் நடத்தத் தயாராகி வருவதாகவும், வரும் செப்டம்பர் 27 அன்று இஸ்லாமாபாத் நோக்கிப் பெரும் ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.