மூத்த அதிகாரியான தீப்தி கௌர் முகர்ஜி மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை செயலாளராக பணியாற்றியவர்.

மத்திய அரசு தனது உயர்கல்வித் துறையில் முக்கிய நிர்வாக மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கௌர் முகர்ஜி புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கார்ப்பரேட் விவகாரங்கள் துறையின் செயலாளராகப் பணியாற்றிய இவருக்கு, நிர்வாகத் திறமை மற்றும் அனுபவம் அதிகம் என்பதால் இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.