முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குளி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கூரியர் மூலம் வந்த கடிதங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சௌரவ் கங்குளி மற்றும் அவரது மனைவி டோனா கங்குளி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கூரியர் மூலம் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களில், அவர்களைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சௌரவ் கங்குளியின் தனிப்பட்ட செயலாளர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மிரட்டல் விடுத்த நபரைத் தேடி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.