திருவள்ளூர் நகராட்சியில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு விரைவு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஊத்துக்கோட்டை சாலையில் வேடங்கிநல்லூர் பகுதியில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டிருந்தாலும், சில பணிகளினால் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தற்போது இந்த நிலையத்திலிருந்து ரயில் நிலையம் மற்றும் ஆவடி, அம்பத்துர் போன்ற மாநகரப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், புதுச்சேரி, கடலூர், திருச்சி போன்ற பிற மாவட்டங்களுக்கும் விரைவு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.