புக்கெட் முதல் டெல்லி வரையிலான ஏர் இந்தியா விமானத்தில் திடீரென உயரம் குறைந்ததில் 20 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் காயமடைந்தனர். இது குறித்து AAIB விசாரணை மேற்கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி புக்கெட்டில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் (AI 2379), பயணத்தின் போது திடீரென சுமார் 300 அடி உயரம் சரிந்தது. இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வில் 20 பயணிகள் மற்றும் 4 கேபின் பணியாளர்கள் காயமடைந்தனர்.

இந்த விமானத்தில் 3 குழந்தைகள் உட்பட 137 பயணிகளும், 8 பணியாளர்களும் இருந்தனர். பின்னர் விமானம் நிலைபெற்று டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. DGCA அளித்த தகவலின் அடிப்படையில், சர்வதேச விதிகளின்படி AAIB இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.