அயோத்தியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் குண்டு தயாரிப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய குறிப்பு கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் ஆய்வகத்தில் குண்டு தயாரிப்பதற்கான வரைபடங்கள் மற்றும் வழிமுறைகள் அடங்கிய ஒரு குறிப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் சரஃபராஜ் கான் என்ற பாராமெடிக்கல் மாணவர் உட்பட மூன்று மாணவர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மாணவர் லேப்பில் பணியாற்றியபோது இந்த குறிப்பு கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது.

தற்பொழுது ஏடிஎஸ் (ATS) மற்றும் புலனாய்வுப் பிரிவு (IB) இந்தச் சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகிறது. கல்லூரியின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.