சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு புதிய கட்டண விதிமுறைகளை அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. சிறிய கார்களுக்கு ரூ.15,000 மற்றும் SUV-களுக்கு ரூ.25,000 வரை வசூலிக்கப்படலாம்.

சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு புதிய விதிகளை உருவாக்க அரசு முன்வந்துள்ளது. இந்த விதியின் கீழ், பொதுச் சாலைகளில் கார் நிறுத்துபவர்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

சிறு கார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 மற்றும் SUV போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூ.25,000 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.