பொதுப்பணித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் கிக் தொழிலாளர்களின் (Gig workers) நிலையை சரிசெய்வதை தங்களது அடுத்த முக்கிய இலக்காகக் கொள்வதாக Cockroach Janata Party (CJP) நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

NEET-UG விவகாரத்திற்குப் பிறகு, பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுப்பணித் தேர்வுகளில் (PSC) நடக்கும் முறைகேடுகள் குறித்து Cockroach Janata Party (CJP) கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், அரசுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பெரும் அதிருப்தியில் இருப்பதாக CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

மேலும், உணவு விநியோகத் தளங்களில் பணியாற்றும் கிக் தொழிலாளர்களின் நிலை குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கிக் வேலை என்பது வெறும் தொழிலாளர் சுரண்டலே தவிர, அது மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியைப் போன்றது அல்ல என்றும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் கொள்கை மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 'கியா போல்டி பப்ளிக்' என்ற பிரச்சாரத்தின் மூலம் மக்களின் குறைகளைத் தீர்க்க CJP திட்டமிட்டுள்ளது.