ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு கைவிடப்பட்ட ராக்கெட் அதிவேகமாக நிலவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது நிலவுடன் மோதக்கூடிய நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பயன்படுத்தப்படாத ஒரு ராக்கெட் தற்போது விண்வெளியில் மிக அதிவேகமாக நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது நிலவின் மேற்பரப்போடு மோதக்கூடும் என்ற அச்சம் எழுப்பியுள்ளது.

இந்த விண்கலம் நிலவைச் சென்றடைந்தால், அது நிலவின் சூழலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விபத்துத் தவிர்க்க முடியாததா என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.