அடுத்த வாரம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு ராக்கெட் நிலவில் மோதவுள்ளது. ஐந்து மாடி கட்டிடம் அளவிலான ஃபால்கன்-9 ராக்கெட் நிலவில் மோதும்போது ஒரு புதிய பள்ளத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட் பகுதி அடுத்த வாரம் நிலவில் மோதவுள்ளது. இந்த மோதலின் விளைவாக நிலவில் ஒரு புதிய பள்ளம் அல்லது crater உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஐந்து மாடி கட்டிடம் அளவுள்ள இந்த ராக்கெட் நிலவில் மோதவிருப்பது விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு நிலவின் மேற்பரப்பில் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர்.