சர்வதேச விண்வெளி நிலையத்தில் 20 நாட்கள் செலவிட்ட விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, தனது பயண அனுபவங்களையும் இன்றைய இளைஞர்களுக்கான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்.

குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா தனது விண்வெளிப் பயிற்சி மற்றும் அனுபவங்கள் குறித்து பேசுகையில், ஒரு விண்வெளி வீரர் பல துறைகளில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று கூறினார். விண்வெளியில் இருக்கும்போது ஒருவரே விமானி, மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளராக செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் விளக்கினார்.

விண்வெளிப் பயணம் என்பது ஒரு 'நிர்வகிக்கப்பட்ட நெருக்கடி' (managed crisis) என்று குறிப்பிட்ட அவர், புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில் பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நேரில் கண்டபோது வியப்படைவதாகக் கூறினார். பயிற்சியின் போது ஏற்படும் அழுத்தத்தை விட, விண்வெளியில் இருக்கும்போது உணரப்படும் பிரம்மாண்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்று அவர் தெரிவித்தார்.