சீனாவின் ஹுவாஷன் பாறை ஓவியங்கள் ஏன் இன்றும் அழியாமல் உள்ளன என்ற மர்மத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியங்களை உருவாக்க மனித ரத்தம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹுவாஷன் பாறை ஓவியங்கள் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானவை. கடுமையான வெப்பம், மழை மற்றும் புயல்களைத் தாண்டி இந்த ஓவியங்கள் இன்றும் அப்படியே இருப்பதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஓவியங்களை உருவாக்கிய லோயுவா மக்கள், வண்ணங்களை உருவாக்க மனித ரத்தத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.

ஆய்வின்படி, இந்த வண்ண கலவையில் சுண்ணாம்பு, சிவப்பு மண் மற்றும் மனித ரத்தம் கலந்திருந்தது. குறிப்பாக, பிரசவ காலத்திலிருந்து பெறப்பட்ட பெண்களின் இரத்தத்தில் உள்ள புரதங்கள் இதில் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கூறுகள் சுண்ணாத்துடன் சேர்ந்து ஒரு வகை கால்சியம் கார்பனேட்டை உருவாக்குகின்றன, இது வண்ணத்தை பாறையின் மேற்பரப்புடன் மிக உறுதியாக இணைக்கிறது. இதனால் தான் இவ்வளவு காலத்திற்குப் பிறகும் இந்த ஓவியங்கள் சிதையாமல் உள்ளன.