உலகின் மிகப்பெரிய ஆப்டிகல் டெலஸ்கோப்பான 'திரிட்டி மீட்டர் டெலஸ்கோப்' (TMT) கட்டுமானத்திற்காக ஸ்பெயின் அரசாங்கமும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியும் (EIB) 1 பில்லியன் யூரோவை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளன. இந்தத் திட்டத்தில் இந்தியா 10 சதவீதப் பங்களிப்பை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
ஸ்பெயின் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி (EIB) இணைந்து, உலகின் மிகப்பெரிய ஆப்டிகல் டெலஸ்கோப்பான 'திரிட்டி மீட்டர் டெலஸ்கோப்' (TMT) கட்டமைப்பிற்காக சுமார் ஒரு பில்லியன் யூரோவை திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த TMT சர்வதேச ஆய்வகம் ஸ்பெயினின் லா பால்மா பகுதியில் உள்ள ரோக் டி லோஸ் முச்சச்சோஸ் ஆய்வகத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்த சர்வதேச கூட்டமைப்பில் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் சீனாவுடன் இந்தியா ஒரு முக்கிய அங்கமாகும். 2014 இல் இந்தியா இக்கூட்டமைப்பில் இணைந்தபோது, கட்டுமான செலவில் 10 சதவீதத்தை (சுமார் ₹13,000 கோடி) வழங்க ஒப்புக்கொண்டது. டெலஸ்கோப்பின் முதன்மை கண்ணாடியின் தேவைப்படும் 84 கண்ணாடித் துண்டுகள் மற்றும் துல்லியமான இயந்திர பாகங்களை தயாரிக்கும் பொறுப்பை இந்தியாவே ஏற்கும்.