செவா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதால், அதன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் கேமர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஷிப்பிங் நிறுவனங்களில் ஒன்றான செவா லாஜிஸ்டிக்ஸ் (Ceva Logistics) சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தத் தாக்குதலால் ஐரோப்பாவில் உள்ள எட்டு கிடங்குகள் பாதிக்கப்பட்டு, சரக்கு விநியோகத்தில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பெயர்கள், வீட்டு முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற முக்கியமான தகவல்கள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டச்சு ரீடெய்லர் நிறுவனமான போல் (Bol), வங்கி நிறுவனமான ஐஎன்ஜி (ING) மற்றும் வீடியோ கேம் நிறுவனமான வால்வ் (Valve) ஆகியவை இந்தத் தரவு கசிவை உறுதி செய்துள்ளன. குறிப்பாக, ஸ்டீம் (Steam) ஹார்டுவேர் வாங்கிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக வால்வ் எச்சரித்துள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.