உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணி மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்திய பெண்கள் அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
ஒன்டாரியோவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் அணி சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணி அபாரமாக விளையாடிள்ளது. மூன்றாவது தரவரிசை இங்கிலண்டை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். அடுத்த கட்டத்தில் அவர்கள் அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ளனர். கடந்த ஆண்டு வென்ற வெண்கலப் பதக்கத்தை விட இந்த ஆண்டு சிறப்பான வெற்றியைப் பெற இந்திய ஆண்கள் இலக்கு வைத்துள்ளனர்.
ஆரியவீர் திவான் ரானி ஹிக்கிளிங்கை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியாவிற்கு முன்னிலை பெற்றார். இங்கிலாந்து சமன் செய்த போதிலும், குர்வீர் சிங் ஜார்ஜ் கிராபிஃபைக்கை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். அதேசமயம், இந்திய பெண்கள் அணி அமெரிக்காவிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. உலக ஜூனியர் சாம்பியனான அனஹத் சிங் சிறப்பாக விளையாடிய போதிலும், மற்ற வீரர்கள் தோல்வியைத் தவிர்க்கவில்லை.