ஊழல் புகாரால் மன்ஜோத் கல்ரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜாஃப்னா பிரான்சைசி இப்போது ஸ்வீடனின் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜஹீா் கான் இதன் புதிய இணை உரிமையாளராக இணைந்துள்ளார்.

இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜாஃப்னா பிரான்சைசியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனை ஸ்வீடனைச் சேர்ந்த ஆங்கர் ஸ்போர்ட்ஸ் ஏபி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அணியின் பெயர் 'ஆங்கர் ஜாஃப்னா கிங்ஸ்' என மாற்றப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜஹீா் கான் இதன் இணை உரிமையாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு இந்தியாவின் அண்டர்-19 உலக சாம்பியன் அணியின் உறுப்பினராக இருந்த மன்ஜோத் கல்ரா, சமீபத்தில் லஞ்ச ஊழல் புகாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சிக்கலுக்குப் பிறகு, ஆங்கர் ஸ்போர்ட்ஸின் உரிமையாளர் நாகேந்திர சித்தார்தத்துடன் இணைந்து ஜஹீா் கான் இந்த அணியை வழிநடத்தவுள்ளார். ஜஹீா் கான் தனது புதிய பொறுப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளதோடு, இலங்கை கிரிக்கெட்டில் பங்கெடுப்பதில் பெருமைப்படுபதாகவும் கூறியுள்ளார்.