உலகத் டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இறுதிப் போட்டிக்குச் செல்ல அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
WTC 2025-27 அட்டவணையில் இந்திய அணியின் வாய்ப்புகள் சவாலான நிலையில் உள்ளன. தற்போது 9 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 48.15 PCT பெற்று இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. வங்கதேச அணியும் இந்தியாவை விட முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் மீதம உள்ளன. இந்தியா மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அதன் PCT 74.07 ஆக உயரும், இது இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்யலாம். ஆனால், ஒரு தோல்வி ஏற்பட்டால் PCT 68.5 ஆகவும், மூன்று தோல்விகள் ஏற்பட்டால் 57.41 ஆகவும் குறையும்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடர் என இந்திய அணிக்கு கடினமான அட்டவணை காத்திருக்கிறது. எனவே, ஒவ்வொரு போட்டியும் இந்தியாவிற்கு ஒரு நாக்அவுட் போட்டியாகவே மாறியுள்ளது.