இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், தனது சொந்த மாநிலமான உத்தரகண்டில் நிலம் வாங்க உதவி செய்யுமாறு முதல்வர் புஷ்கர் சிங் தாமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த முதல்வர், விதிகளின்படி அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், டெல்லியிலிருந்து உத்தரகண்டிற்கு குடிபெயர்வதற்காக நிலம் வாங்குவதில் உள்ள சிக்கல்களை சமூக வலைதளமான எக்ஸில் (X) பகிர்ந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தகுந்த நிலம் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பந்த் தான் நிலத்தை இலவசமாக எதிர்பார்க்கவில்லை என்றும், அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்க விரும்புவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பந்தின் இந்த விருப்பத்தை வரவேற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் தொடர்பு கொள்ளப்படுவார் என்றும் கூறியுள்ளார்.