ஹைதராபாத்தைச் சேர்ந்த 14 வயது சதுரங்க வீராங்கனை தீக்ஷிதா, ஒரு மாதத்தில் தனது ரேட்டிங்கை 1985-லிருந்து 2469.8-ஆக உயர்த்தி உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தீக்ஷிதா, ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது நான்கு தொடர் போட்டிகளில் பங்கேற்று வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார். வெறும் 30 நாட்களில் சுமார் 29,200 ரேங்கிங் இடங்களை முன்னேறிய அவர், தற்போது உலகின் முதல் 800 வீரர்களின் பட்டியலில் நுழைய உள்ளார்.

இந்த பயணத்தில் அவர் தனது முதல் IM (International Master) நார்ப்பையும் பெற்றுள்ளார். 20 வயதிற்குட்பட்ட பெண்களில் தற்போது உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் அவர், இந்தியப் பெண்களின் ரேட்டிங் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.