2027 ஒருநாள் உலகக் கோப்பையின் தகுதி மற்றும் போட்டி வடிவத்தில் ICC மேற்கொண்ட திடீர் மாற்றத்தால் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) போட்டிகளின் வடிவத்தில் திடீர் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த முடிவால் அதிருப்தியடைந்த ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியங்கள், எந்தவித ஆலோசனையும் இன்றி எடுக்கப்பட்ட இந்த முடிவு சிறிய நாடுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளன.
புதிய விதிகளின்படி, குறைந்த தரவரிசை கொண்ட மூன்று அணிகள் முதலில் மோதிக் கொள்ளும், அதில் வெற்றி பெறும் ஒரு அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும். பின்னர் 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் 7 அணிகள் 'சூப்பர் 7' சுற்றுக்குச் செல்லும். இந்த மாற்றம் பெரிய நாடுகளைப் பாதுகாக்கவும், ஒளிபரப்பு வருமானத்தை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.