ரஷ்யாவில் விளையாடிய ஒரு ஈரானிய டிபெண்டர், தனது தனித்துவமான சால்டோ த்ரோ-இன் முறையில் பந்தை அனுப்பி அபாரமான கோல் அசிஸ்ட்டை வழங்கியுள்ளார்.
ரஷ்யன் ஃபர்ஸ்ட் லீக் போட்டியில் ஸ்பார்டாக் கோஸ்ட்ரோமா அணி சார்பாக விளையாடிய நாடெர் முஹம்மதி, எஸ்.கே.ஏ-கபாரோவ்ஸ்க் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வியக்கத்தக்க செயலைச் செய்தார். பந்தை த்ரோ-இன் செய்வதற்கு முன்னதாக முன்னோக்கி ஒரு சால்டோ (somersault) அடித்து, பந்தை பெனால்டி ஏரியாவிற்குள் துல்லியமாக அனுப்பினார். இதனைத் தொடர்ந்து செர்ஜி புக்ரியோவ் பந்தை ஹெடர் செய்து கோலாக மாற்றினார்.
முஹம்மதி கால்பந்துக்கு வருவதற்கு முன்பு பத்து ஆண்டுகள் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற்றவர். இந்தத் திறன் அவருக்கு த்ரோ-இன் செய்யும்போது கூடுதல் வேகத்தையும் தூரத்தையும் வழங்குகிறது. அவரது பயிற்சியாளர் ரோமன் பெரெஜோவ்ஸ்கி, இந்த முறையை ஒரு தந்திரோபாய ஆயுதமாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.