சர்பராஸ் கான் தனது உடல் எடையில் 17 கிலோவைக் குறைத்து அசத்தியுள்ளார். காஷ்மீரில் மேற்கொண்ட தீவிரப் பயிற்சியின் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, சர்பராஸ் மும்பை டி20 லீக்கில் ஆகாஷ் டைகர்ஸ் வெஸ்டர்ன் மும்பை புறநகர் அணிக்காக சில அதிரடி இன்னிங்ஸ்களை விளையாடினார். மும்பையில் பருவமழை தொடங்கியவுடன், அவர் காஷ்மீருக்குப் பயணமானார்.

அங்கு தங்கியிருந்த காலத்தில், நெட் பவுலர்கள் மற்றும் மாநில அணி வீரர்களுடன் இணைந்து தீவிரமாகப் பயிற்சி பெற்றார். இந்த அர்ப்பணிப்பு அவரைத் தேர்வாளர்களின் நம்பிக்கையைப் பெறச் செய்தது.