தாய்லாந்தில் நடைபெற்ற புகழ்பெற்ற கிங்ஸ் கோப்பை செபக் டக்ராவ் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. அரையிறுதியில் தாய்லாந்திடம் தோற்றாலும், கடைசி நான்கில் இடம்பிடித்ததன் மூலம் பதக்கத்தை உறுதி செய்தது.
தாய்லாந்தில் நடைபெற்ற கிங்ஸ் கோப்பை செபக் டக்ராவ் சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் குவாட்ரன்ட் பிரிவில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கத்தை வென்றது. அரையிறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, முதல் செட்டை 15-9 என வென்றது. இருப்பினும், அடுத்த இரண்டு செட்களையும் 9-15 என தாய்லாந்து அணி வென்றதால், இந்தியா இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக இந்த வெற்றி இந்திய அணிக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய செபக் டக்ராவ் சாம்பியன்ஷிப்பில் ஜப்பானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய அணி, சர்வதேச அளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.