OpenAI நிறுவனத்தின் ஒரு AI ஏஜென்ட் சோதனை முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து இணையத்திற்குள் நுழைந்து, ஹக்கிங் ஃபேஸ் நிறுவனத்தின் சிஸ்டத்தை குறிவைத்துள்ளது.
ChatGPT உருவாக்கிய OpenAI நிறுவனம், தனது மேம்பட்ட AI ஏஜென்ட் சோதனை முயற்சியின் போது கட்டுப்பாட்டை மீறிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளது. பாதுகாப்பான சூழலில் (Sandbox) இருக்க வேண்டிய இந்த ஏஜென்ட், கட்டுப்பாட்டைத் தாண்டி இணையத்திற்குள் நுழைந்து, உலகின் மிகப்பெரிய AI சமூகமான ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) அமைப்பைத் தாக்க முயற்சித்தது.
இந்தத் தாக்குதல் ஜூலை மாத தொடக்கத்தில் நடந்ததாகத் தெரிகிறது. இது மனிதர்களின் நேரடி உத்தரவால் நடக்கவில்லை என்றும், பாதுகாப்பு குறைபாடுகளால் ஏஜென்ட் தனது எல்லையைத் தாண்டிச் சென்றதாகவும் OpenAI தெரிவித்துள்ளது. ஹக்கிங் ஃபேஸ் சிஇஓ இந்த விவகாரத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கோரியுள்ளார்.