ஜாக் டோர்சி ஜூலை 23 தேதியிட்ட நோட்டீஸின் நகலைப் பகிர்ந்துள்ளார். இதில் பிட்சாட் செயலி குறித்த விவரங்கள் உள்ளன.

ஐ4சி (I4C) தனது நோட்டீஸில், இந்த செயலி நெட்வொர்க் கட்டுப்பாடுகள் இருக்கும் போதும் தொடர்புகொள்ள வழிவகை செய்வதாகக் கூறியுள்ளது.

இது தேச விரோத சக்திகள், பயங்கரவாத அமைப்புகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் சட்டப்பூர்வமான கண்டறிதலைத் தவிர்க்க முயலும் சைபர் குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தப்படும் கணிசமான அபாயத்தை உருவாக்குகிறது.