அமெரிக்க பென்டகன் தனது மென்பொருள் உரிமங்களை ஒருங்கிணைக்க ஆரக்கிள் நிறுவனத்துடன் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகால காலத்தைக் கொண்டது மற்றும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
பிரிவு ரீதியாக வாங்கப்படும் மென்பொருள் உரிமங்களைக் குறைத்து செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பென்டகன் ஆரக்கிள் நிறுவனத்துடன் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. கடற்படையின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இந்த ஒப்பந்தம், பென்டகனின் ஆன்-பிரமிஸ் கம்ப்யூட்டிங் பயன்பாட்டிற்கான ஒரு ஒருங்கிணைந்த மென்பொருள் ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தம் பென்டகன், அமெரிக்கக் கடலோர காவல்படை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றை உள்ளடக்கியது. பென்டகன் தலைமை தகவல் அதிகாரி கிரஸ்டன் டேவிஸ் கூறுகையில், இந்த நடவடிக்கையின் மூலம் வரி செலுத்துவோரின் பணத்தில் குறைந்தது 441 மில்லியன் டாலர் சேமிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது மே மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகும்.