ஹேக்கர்கள் ஊழியர்களின் தரவை திருடியதாகக் கூறியுள்ள நிலையில், அந்தத் தரவுகள் பல ஆண்டுகள் பழமையானவை என்று HCLTech தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் உள் அமைப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCLTech, ஊழியர்களின் தரவு திருடப்பட்டதாக ஹேக்கர் குழுவினர் கூறியுள்ள புகாருக்குப் பதிலளித்துள்ளது. ஹேக்கர்கள் சுமார் 2,50,000 ஊழியர்களின் விவரங்களை விற்பனை செய்வதாகக் கூறியுள்ளனர். இருப்பினும், இந்தத் தரவுகள் சில ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும், அவை மிகவும் வரையறுக்கப்பட்டவை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் அஸூர் (Microsoft Azure) மூலம் இந்தத் தரவு திருடப்பட்டதாக ஹேக்கர்கள் உரிமை கோருகின்றனர். ஆனால், நிறுவனத்தின் உள் அமைப்புகள் அல்லது வாடிக்கையாளர் தரவுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று HCLTech உறுதிபடத் தெரிவித்துள்ளது. இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.