அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் நேதன் தாமஸ், உலகின் மிக இளம் ஆண் பேராசிரியராக கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் 306 ஆண்டுகள் முறியடிக்கப்படாத சாதனையை உடைத்துள்ளார்.
புளோரிடாவைச் சேர்ந்த நேதன் தாமஸ், வெறும் 18 வயது மற்றும் 346 நாட்களில் உலகின் மிக இளம் ஆண் பேராசிரியராகி கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கு கணினி நிரலாக்கம் (C programming) கற்பிக்கும் பணியில் அவர் இணைந்துள்ளார்.
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 19 வயதில் பேராசிரியர் ஆன ஸ்காட்லாந்து கணிதவியலாளர் கொலின் மெக்லாரினின் 306 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார். பொறியியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நேதன், தற்போது சட்டப் படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.