நொய்டாவில் ரேபிடோ பைக் புக் செய்த பெண்ணிடம், பைக்குக்கு பதிலாக காரில் வந்த ஓட்டுநர் அவரை வலுக்கட்டாயமாக ஏறுமாறு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவின் செக்டர் 16 மெட்ரோ நிலையம் அருகே இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மோனி ஷாண்டில்யா என்ற பெண் பைக் புக் செய்த நிலையில், அங்கு ஒரு மாருதி ரிட்ஸ் கார் வந்து நின்றது. பைக் பழுதாகிவிட்டதாகக் கூறிய ஓட்டுநர், அவரை காரில் ஏறுமாறு வற்புறுத்தினார்.
பயந்துபோன அந்தப் பெண் கத்தத் தொடங்கியதையடுத்து ஓட்டுநர் அங்கிருந்து சென்றார். இது குறித்து ரேபிடோ நிறுவனம் விளக்கம் அளித்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் கணக்கு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.