பிரிட்டனின் லிவர்பூலை நோக்கிச் சென்ற easyJet விமானத்தில் பிரிட்டிஷ் பயணிகள் இடையே ஏற்பட்ட மோதலால், விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களிலேயே டெனெரிஃபிற்குத் திரும்பியது.
செவ்வாய்க்கிழமை மாலை 186 பயணிகளுடன் லிவர்பூலை நோக்கிப் புறப்பட்ட easyJet விமானம், 30,000 அடி உயரத்தில் இருந்தபோது ஒரு பெரிய மோதலுக்கு உள்ளானது. இரண்டு பிரிட்டிஷ் பயணிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதால், விமானத்தின் பாதுகாப்பு கருதி கேப்டன் விமானத்தை மீண்டும் டெனெரிஃபிற்குத் திருப்பினார்.
விமானத் தரப்பில் கூறுகையில், பயணிகள் குழுவினர் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால் விமானம் திரும்பியதாகத் தெரிவித்தனர். டெனெரிஃப் தெற்கு விமான நிலையத்திற்கு விமானம் வந்தடைந்ததும் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. இதில் தொடர்புடைய இரண்டு பெரியவர்கள் மற்றும் ஆறு மைனர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விமான நிலையத்திலேயே இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் விமானத்திற்குள்ளும் தொடர்ந்தது என்று தெரியவந்துள்ளது.