ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. நிலநடுக்கத்தின் போது மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி குமாமோட்டோவைச் சுற்றியே இருந்ததாகத் தெரிகிறது. சேதங்கள் மற்றும் உயிர் இழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்காகத் தற்பொழுது காத்திருக்கின்றனர்.