கடும் வெப்பம் மற்றும் வறட்சியால் டான்யூப் நதியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், ஹங்கேரியின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மூடுமாறு அந்நாடு அறிவித்துள்ளது.

கடுமையான வெப்ப அலை காரணமாக, கடந்த 44 ஆண்டுகளில் முதல்முறையாக ஹங்கேரியின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மூடுவதற்கு அந்நாடு முடிவு செய்துள்ளது. கடும் வெப்பம் மற்றும் வறட்சியால் டான்யூப் நதியின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

இந்த நீர் பற்றாக்குறை அணு உலையின் குளிர்விப்பு அமைப்புகளை (cooling systems) பாதிப்பதால், மின் உற்பத்தித் தடையின்றி நடைபெற இயலவில்லை.