ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக கருங்கடல் மற்றும் கெர்ச் நீர்ச்சந்தியில் ஏற்பட்டுள்ள மோதல்கள் உலகளாவிய உணவு விநியோகத்தை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது 2022-ல் ஏற்பட்ட உணவு நெருக்கடியைப் போன்ற சூழலை உருவாக்கலாம்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரினால் கருங்கடல் மற்றும் கெர்ச் நீர்ச்சந்தியில் துறைமுகங்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இது விவசாய வர்த்தகத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. உக்ரைனின் ஒடெசா துறைமுக வளாகம் மற்றும் ரஷ்யாவின் முக்கிய தானிய ஏற்றுமதித் துறைமுகங்கள் இலக்காவதால் ஏற்றுமதி வணிகம் முடங்கியுள்ளது.
உலக கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பகுதியில் ஏற்படும் இடையூறுகள் கோதுமை மட்டுமல்லாது மக்காச்சோளம், பார்லி மற்றும் சூரியகாந்தி எண்ணெய் விலையையும் உயர்த்தக்கூடும். தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் வானிலை மாற்றங்கள் இணைந்து ஒரு பெரிய உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.