டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இதுவரை 1,75,000-க்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதே இதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிபர் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் 1,75,000-க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குடிவரவு விதிகளின் தீவிர அமலாக்கத்தின் ஒரு பகுதியாகும்.
ரத்து செய்யப்பட்ட விசாக்களில் பெரும்பாலானவை குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களுடையது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.