கிழக்கு சீனாவைத் தாக்கிய டைபூன் டால்பினின் தாக்கத்தால் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் விமான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் மணிக்கு 151 கி.மீ வேகத்தில் வீசிய டைபூன் டால்பினின் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிர் இழப்புகளைத் தவிர்க்க அரசு விரைவாக 10 லட்சம் மக்களை வெளியேற்றியது.

கடுமையான மழை மற்றும் பலத்த காற்றினால் பல விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயலின் வேகம் தற்போது குறைந்திருந்தாலும், கனமழை பெய்யும் அபாயம் நீடிப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.