இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் மதுபானி கலைப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் இந்திய பாரம்பரியக் கலைகளை சீன மக்களிடையே கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மதுபானி கலைப் பயிலரங்குகளை ஒருங்கிணைத்தன. இதில் கலை ஆர்வலர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் சீன மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பீகாரின் மிதிலா பிராந்தியத்தைச் சேர்ந்த பாரம்பரிய மதுபானி ஓவியங்களின் நுணுக்கங்கள் மற்றும் வண்ணங்கள் குறித்து இந்த நிகழ்வுகளில் விளக்கப்பட்டது. ஷாங்காயில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 200 பேர் பங்கேற்றனர். மேலும், இந்தியக் கலைகளை மேம்படுத்த தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கி வரும் சீன மாணவர்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் பாராட்டினர்.