மாஸ்கோ அருகே உள்ள போடோல்ஸ்க் பகுதியில் உள்ள வைல்ட்பெர்ரிஸ் கிடங்கின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவிற்கு அருகில் உள்ள போடோல்ஸ்க் பகுதியில் உள்ள வைல்ட்பெர்ரிஸ் (Wildberries) கிடங்கின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரே வோரோபியோவ், இந்தத் தாக்குதலில் பணியாளர்களுக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய வர்த்தக மையங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கருதப்படுகிறது.