குஜராத்தில் பெய்த கனமழையினால் குடியிருப்புப் பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வல்சாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீடு சூழ்ந்துள்ள நீரின் அளவைக் காட்ட கழுத்து வரை நீரில் நின்று வீடியோ எடுத்துள்ளார்.
குஜராத்தில் பெய்த கனமழையினால் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. வல்சாத் நகரில் வசிக்கும் ஷிவம் சிங் என்ற நபர், தனது பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் காட்ட கழுத்து வரை நீருக்குள் நின்று வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவில் சாலைகள் தெரியாத அளவிற்கு நீர் தேங்கியுள்ளது.
தன்னுடைய குடியிருப்புப் பகுதியில் ஒரு புதிய ஆறு ஓடுவது போல் இருப்பதாக நகைச்சுவையாகக் கூறிய அவர், நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், முறையான வடிகால் வசதி இல்லாதது குறித்த அச்சத்தை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.