கேரளாவில் தொடரும் கனமழையினால் வெள்ள நீர் பரவி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
கேரளாவின் பல பகுதிகளில் தொடரும் கனமழையினால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக பத்னம்திட்டா, ஆலப்புழா மற்றும் கொட்டயம் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் 10 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.